பரபரப்பு தகவல்
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோதே திமுகவில் இருந்து விலக்கப்பட்டார் முக அழகிரி என்பது தெரிந்ததே. கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவில் இணைய முக அழகிரி எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததை அடுத்து கடந்த சில வருடங்களாக அரசியலை விட்டு ஒதுங்கி அமைதியாக அரசியலை அவர் கூர்ந்து கவனித்து வருகிறார்
இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுகவும் தற்போது தள்ளாடிக் கொண்டிருக்கிறது. திமுகவின் எம்எல்ஏக்கள் எம்பிக்களை இழுக்கும் முயற்சியில் பாஜக இருப்பதால் அக்கட்சி பலவீனம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது
இந்த நேரத்தில் இது தான் சரியான சமயம் என புதிய கட்சி ஆரம்பிக்க முக அழகிரி ஆதரவாளர்கள் ஆலோசனை அளித்து வருகின்றனர் இதனையடுத்து அவர் ’கலைஞர் திமுக’ என்ற கட்சியை தொடங்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது