மீண்டும் உயர்ந்தது பெட்ரோல் விலை:

 இன்று சென்னையில் எவ்வளவு?

கொரோனா ஊரடங்கு மற்றும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வீழ்ச்சி ஆகியவை காரணமாக சென்னையில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது

ஆனால் மே மாதத்தில் இருந்து ஊரடங்கு தளர்வுகள் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது..

மேலும் மத்திய அரசின் கலால் வரி உயர்வு, மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரி அதிகரிப்பு ஆகியவற்றாலும், பெட்ரோல் டீசல் விலை உயர ஆரம்பித்தது..

இந்த நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 14காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.84.40ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் விலை தொடர்ந்து 26ஆவது நாளாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

Leave a Reply