நீதிமன்றத்தில் தண்டனை குறைப்பு
சேலத்தில் கென்யா நாட்டு மாணவி ஒருவர் படித்துக் கொண்டிருந்த நிலையில் அதே நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது
இதற்காக கென்ய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அந்த தண்டனை பத்தாண்டு சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது
சேலம் மகளிர் நீதிமன்றம் கென்யா இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து கென்யா இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்
இந்த மேல்முறையீட்டு வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது அந்த தண்டனை 10 ஆண்டுகளாக குறைப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த சம்பவம் கடந்த 2014 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கதுது