டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆபத்தா?
நாடு முழுவதும் ஒரே தேசம் ஒரே தேர்வு என்ற நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆபத்தா? என்ற கேள்வி எழுந்துள்ளது
மாநில அளவில் நடத்தப்படும் தேர்வுகளை எல்லாம் ரத்து செய்து விட்டு நாடு முழுவதும் ஒரே தேசம் ஒரே தீர்வு என்ற முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது
ஆனால் இந்த முடிவுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த புதிய நடைமுறையால் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட ஒரு சில மாநில அரசு நடத்தும் தேர்வுகளுக்கு பாதிப்பு வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
ஆனால் மாநில அரசு அதிகாரிகள் ஒரே தேசம் ஒரே தேர்வு என்ற நடை மொழியால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என கூறிவருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் ஒரு மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டும் அந்த மாநிலத்தில் உள்ள பதவிகளை பெறுவதை தடுக்கவே ஒரே தேசம் ஒரே தேர்வு என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டுவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது