மத்திய அரசு அறிவிப்பு
சினிமா படப்பிடிப்புகள், தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி என மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் தொடர்பாக மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாஸ்க், உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ள மத்திய அரசு, பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்றும் கூறியுள்ளது