தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா?

இன்று அறிவிப்பு வெளிவரும் என தகவல்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் அதாவது நாளையுடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கு முடிவுக்கு வருமா? அல்லது தளர்வுகளா? என இன்று அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது

தமிழகத்தில் 4.10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் நேற்று ஆலோசனை செய்தார்.

இந்த ஆலோசனைக்கு பின் இன்று முதல்வர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நோய் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் முழு ஊரடங்கிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் தமிழகத்தில் செப்டம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்காது என கூறப்படுகிறது

Leave a Reply