எல்லையில் பதட்டம்
லடாக் பகுதியில் சீன வீரர்களின் அத்துமீறல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றபோது இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட மோதலில் சீன தரப்பில் 35 பேர் பலி ஆனார்கள் என்பதும், இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்பதும் தெரிந்ததே
இந்த மோதலுக்கு பின்னர் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி எல்லையில் பதற்றத்தை தணிக்க முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென கல்வான் பள்ளத்தாக்கில் பங்கோங் சோ ஏரியின் வட கரை பகுதியில் கடந்த 29ஆம் தேதி சீன வீரர்கள் திடீரென்று அத்துமீறலில் ஈடுபட்டனர். ஆனால் அதனை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்ததோடு அவர்களை அடித்து விரட்டினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.