ஒரு பேருந்தில் எத்தனை பயணிகளுக்கு அனுமதி?
இன்று முதல் சென்னை உள்பட தமிழகம் எங்கும் பேருந்துகள் ஓடும், மாவட்டங்களுக்கு இடையே மட்டும் ஓடும் பேருந்துகளுக்கு ஒருசில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சென்னையில் இன்று முதல் 3,300 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கவிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.
மேலும் ஒரு பேருந்தில் 24 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு இருக்கைக்கு ஒரு பயணி மட்டுமே அனுமதி நின்று பயணம் செய்யவோம், படிகளில் தொங்கியபடியோ பயணம் செய்யவோ அனுமதி இல்லை.
சென்னை பிராட்வே, கோயம்பேடு போன்ற முக்கியமான இடங்களில் இருந்து திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு மாநகர பஸ்கள் இயக்கம் இல்லை. சென்னை மாவட்ட எல்லைக்குள் மட்டுமே பஸ்கள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து திருப்போரூர் வரையும், ஜி.எஸ்.டி.சாலையில் கூடுவாஞ்சேரி வரையும், கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் வரையும், பூந்தமல்லி சாலையில் திருமழிசை வரையும், செங்குன்றம் சாலையில் பாடியநல்லூர் வரையும், திருவொற்றியூர் சாலையில் மீஞ்சூர் வரையும் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.