இன்று முதல் கோவில்கள் திறப்பு:

பக்தர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

தமிழகம் முழுவதும் இன்று முதல் கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கபப்டவுள்ளதை அடுத்து பக்தர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி

1. தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு

2. பக்தர்கள் முககவசம் அணிந்து வருவது கட்டாயம்

3. பக்தர்களுக்கு கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யவேண்டும். உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும்.

4. கோவில்களில் ஒரே நேரத்தில் 20 பக்தர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

5. பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு ஆதார் அட்டை அடிப்படையில் செயலிகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தரிசனத்திற்கு டோக்கன் வழங்கலாம்.

6. கோவிலுக்குள் பக்தர்கள் கண்டிப்பாக 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிக்க வேண்டும்

7. 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி கிடையாது.

8. தேங்காய், பழம், பூ ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை

9. கோவில்களின் உட்புறம் பக்தர்கள் அங்கப்பிரட்சனம் செய்ய வேண்டாம்.

10. கோவில் வளாகத்தில் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறை ‘சோடியம் ஹைபோகுளோரைட்’ கரைசல் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்

மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது

Leave a Reply