கூட்டணிக்கு திமுக மறைமுக அழைப்பு?
அதிமுக கூட்டணியில் இருந்து எந்தவித பலனையும் அனுபவிக்காத தேமுதிக, விரைவில் முதல் கட்சியாக கூட்டணியில் இருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது
சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில் ‘தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க விரும்புகிறோம் என்றும், 2021 சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும் தேர்தலாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும் தி.மு.க-அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுமே தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைக்கின்றன என்றும், தே.மு.தி.க. இல்லாமல் எந்த அரசியல் கட்சிகளும் இல்லை என்றும், இதுவரை யாரோடும் நாங்கள் கூட்டணி குறித்து பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.
விஜயகாந்த் பிறந்த நாளில் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளதால் திமுக கூட்டணிக்கு மறைமுக அழைப்பு விடுத்ததாகவே கருதப்படுகிறது. இருப்பினும் தேர்தல் நெருங்கும்போது மட்டுமே கூட்டணியின் இறுதிவடிவம் தெரிய வரும்