இந்திய சீன எல்லை பதட்டம்:

 அமெரிக்க அரசு அதிர்ச்சி கருத்து

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அவ்வப்போது ஊடுருவ முயற்சிப்பதும் அதனை இந்திய வீரர்கள் முறியடிப்பதுமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன

சமீபத்தில் கூட சீன வீரர்கள் ஊடுருவ முயற்சி செய்ததாகவும் அதனை இந்திய விரர்கள் வெற்றிகரமாக முறியடித்த செய்திகள் வெளியானது

இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா எல்லை நிலைமை குறித்து அமெரிக்க அரசு கருத்து தெரிவித்துள்ளது நாங்கள் சீன-இந்திய என்னை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சீன அரசு நடந்து கொள்ளும் ஆக்ரோஷமான செயல்பாடு கவலைக்குரியது என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது

இந்த நிலையில் அமெரிக்கா இந்தியா திட்டமிடல் பங்களிப்பு அமைப்பின் மூன்றாவது ஆண்டு தலைமைத்துவ மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். செப்டம்பர் மூன்றாம் தேதி இந்த மாநாடு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply