கடும் எதிர்ப்பு எதிரொலி:

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்திற்கு அனுமதி

சமீபத்தில் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டது

ஆனால் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 30 நிமிடங்கள் கேள்வி நேரத்திற்கு அனுமதி என தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது

செப்டம்பர் 14-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. கொரோனா காரணமாக இந்த கூட்டத்தொடர் மாலை நேரத்தில் மட்டும் நடைபெறும் என்றும் அதே நேரத்தில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது

இதனை அடுத்து எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளை தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 30 நிமிடங்கள் மட்டும் கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் அமைச்சர்களிடம் இருந்து துறை சார்ந்த நேரடி கேள்வி பதில் இடம்பெறாது என்றும் அமைச்சர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமான பதில்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது

Leave a Reply