கொரனோ நோயாளியின் உடல் உறுப்புகள் திருட்டா?

அதிர்ச்சி தகவல்

தஞ்சை மாவட்டத்தில் நகைக்கடை அதிபர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த ஜூலை 29 ஆம் தேதி உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது

இதனை அடுத்து அவரது உடல் கொரோனா நோயாளிகள் அடக்கம் செய்யப்படும் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது

இந்த நிலையில் மறைந்த நகைக்கடை அதிபரின் மனைவி தனது கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவருடைய உடல் உள்ளுறுப்புகள் திருடப்பட்டுள்ளதாகவும் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசு மருத்துவர்கள் முன்னிலையில் மீண்டும் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்

தற்போது போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

Leave a Reply