கொரோனா வைரஸ் பயம்:

மூன்று குழந்தைகளை 4 மாதம் தனித்தனியாக அறையில் வைத்து பூட்டிய பெற்றோர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களுடைய மூன்று குழந்தைகளையும் தனித்தனி அறையில் கடந்த நான்கு மாதங்களாக பூட்டி வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஸ்வீடன் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த நாட்டைச் சேர்ந்த பெற்றோர் தங்களுடைய மூன்று குழந்தைகளையும் தனித் தனி அறையில் பூட்டி வைத்துள்ளனர்

நான்கு மாதங்களாக அவர்கள் தங்களுடைய குழந்தைகளை பூட்டி வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் இவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் சுவீடன் மொழியை பேசவோ புரிந்துகொள்ளவோ முடியாத காரணத்தினால் தங்கள் சொந்த நாட்டின் விதிமுறைகளை பின்பற்றி இவ்வாறு அர்த்தமுள்ளதாக குழந்தையின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply