உலக நாடுகளில் இதுவரை இல்லாத உச்சகட்டமாக இந்தியாவில் ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41 லட்சத்தைக் கடந்தது. அதாவது இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,10,839 ஆகும்
மேலும் இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிகை 8,61, 866 என்பதும், இந்தியாவில் ஒரேநாளில் 1044 பேர் கொரோனாவுக்கு மரணம் மற்றும் மொத்த உயிரிழப்பு 70,679 என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 73,161 என்பதும், இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 31,77, 673 என்பதும் குறிப்பிடத்தக்கது.