ஆயிரம் கோடி சொத்து உள்ள பெண்ணுக்கு தேடப்படும் மாப்பிள்ளை: நடிகை கஸ்தூரி தகவல்

நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் முன்னணி ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த விளம்பரம் ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த விளம்பரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் பேத்தி ஆயிரம் கோடி சொத்து மதிப்பு உடையவர் என்றும் 24 வயதான அவருக்கு தகுந்த மாப்பிள்ளையை பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது

மேலும் சொந்தமாக இன்ஜினியரிங் கல்லூரி இருப்பதாகவும் மால்கள், எஞ்சினியரிங் கல்லூரிகள் இருப்பதாகவும் இந்த பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளையை தேடி வருவதாகவும் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்ணையும் குறிப்பிடபட்டுள்ளது

இதனை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நடிகை கஸ்தூரி இது உண்மையான விளம்பரம் தானா அல்லது போலி விளம்பரமா? இந்த மொபைல் எண்ணில் யாராவது தொடர்பு கொண்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்

இந்த விளம்பரம் இரண்டு வருடங்களாக வந்து கொண்டிருப்பதாகவும், அதில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண் ஒரு மேட்ரிமோனியல் நிறுவனத்தின் எண் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply