சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று பேசினார். இந்த நிலையில் அதிமுக நாளேடு இதுகுறித்து விமர்சனம் செய்துள்ளது
8 மாதங்கள் இல்லை 8000 மாதம் ஆனாலும் திமுக ஆட்சி என்பது எட்டாக் கனிதான் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
18 மணி நேர மின்வெட்டு, ஊரெங்கும் நிகழ்ந்த பரபரக்க வைக்கும் நில அபகரிப்புகள், கனிமவள திருட்டு, கலை உலக வளைப்பு, சென்னைக்கு ஒரு முதலமைச்சர் மதுரைக்கு ஒரு முதலமைச்சர் கோவைக்கு ஒரு முதலமைச்சர் கோபாலபுரத்துக்கு ஒரு முதலமைச்சர் சிஐடி காலனிக்கு ஒரு முதலமைச்சர் வேளச்சேரிக்கு ஒரு முதலமைச்சர் இப்படி ஒரு டஜனுக்கும் மேலான முதலமைச்சர் வைத்துக்கொண்டு திமுக நடத்திய கோமாளிக் கூத்து கொள்ளைகளையும் ஈழத்து இன அழிப்பையும் மக்கள் மறந்துவிட மாட்டார்கள்
எனவே கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு என்னும் கதைதான் திமுக ஆட்சிக்கு வரும் என்று கூறும் போது ஞாபகத்துக்கு வருகிறது என்று அந்த நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது