தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் முதல்முறையாக தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறவுள்ளது
இந்த சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏக்களுக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது என்பதும், முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே
ஆனால் அதே நேரத்தில் 3 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டார்கள்
இன்றைய கூட்டத்தொடரில் நீட் தேர்வு மரணங்கள் உள்ளிட்டவைகளை சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது