கேரளாவில் மோட்டார் வாகனத்துறை பரிசோதனை தீவிரம்

கேரளாவில் ஹெல்மெட் பரிசோதனையை மோட்டார் வாகனத்துறை மற்றும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்:

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.1500 அபராதம் அல்லது ஒரு மாதம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மோட்டார் வாகனத் துறையின் இந்த அச்சுறுத்தலை தொடர்ந்து கேரளாவில் ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கை அதிகரித்ததும், 50கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

மோட்டார் வாகனத்துறையின் இந்த அதிரடி உத்தரவுகளால் கடந்த சில வாரங்களாக இரு சக்கர வாகன விபத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹெல்மெட் பரிசோதனையின் போது சிலர் வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக சென்று விடுகின்றனர். இவ்வாறு செல்பவர்களை பிடிக்கவும் மோட்டார் வாகனத்துறை தீர்மானித்துள்ளது. இதன்படி ஹெல்மெட் பரிசோதனையின் போது வாகனத்தை நிறுத்தாமல் செல்பவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கவும் வாகன பதிவை 3 மாதம் வரை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply