நாளை முதல் டிக்டாக் செயலிக்கு தடை: அமெரிக்கா அறிவிப்பு

சீன செயலிகளானடிக்‌ டாக்‌ செயலியை நாளை முதல்‌ பதிவிறக்கம்‌ செய்ய தடை என அமெரிக்கா அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சீனாவின்‌ டிக்‌-டாக்‌ செயலி, அமெரிக்கர்களை உளவு பார்ப்பதாக ஏற்கனவே குற்றம்‌ சாட்டியிருந்த அமெரிக்க அதிபர்‌ டிரம்ப்‌, இம்மாத 15 ஆம்‌ தேதிக்குள்‌ டிக்‌-டாக்‌ செயலியை அமெரிக்க நிறுவனத்திடம்‌ விற்கா விட்டால்‌ தடை செய்யப்படும் என எச்சரித்தார்‌.

இந்த நிலையில்‌, டிக்‌-டாக்‌ செயலிக்கு கொடுத்த கெடு ஏற்கனவே முடிவடைந்துவிட்டதை அடுத்து நாளை முதல்‌ டிக்‌-டாக்கை புதிதாக பதிவிறக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது. மேலும் அமெரிக்கா வலியுறுத்திய பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றாவிட்டால்‌, நவம்பர்‌ 12ஆம்‌ தேதி முதல்‌, டிக்‌-டாக்‌ செயலிக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படூம்‌ என அமெரிக்கா எச்சரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply