தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக விஜயகாந்த்துக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், பரிசோதனையின் முடிவில் விஜயகாந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விஜயகாந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிவந்த தகவலால் தேமுதிக கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.