எஸ்பிபி உடல் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல பாடகர் எஸ்பிபி-ன் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது

இந்த நிலையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு அவரது சொந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே கோணேட்டம் பேட்டை கிராமம் தான் எஸ்பிபியின் சொந்த ஊர். தனது சொந்த கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை தனது சொந்த பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தார் எஸ்பிபி.

மேலும் அந்த கிராமத்தில் இருந்த பள்ளிக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். பாடும் நிலா பாலசுப்ரமணியத்தின் மறைவு கோணேட்டம் பேட்டை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply