கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்களை தமிழக அரசு வழங்கி வருகிறது என்பதும் அதன் மூலம் இலவச உணவு பொருட்களை வழங்கி வருகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன்கள் வரும் 28 முதல் 30 ஆம் தேதி வரை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன்களை ரேசன் கடை பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே வந்து அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது