மாஸ்க் அணியாமல் வருபவர்களை வரவேற்கும் மண்டை ஓட்டு அதிகாரிகள்: பரபரப்பு தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து வெளியே வரும் பொதுமக்கள் மாஸ் கண்டிப்பாக அணிய வேண்டும் என உள்ளூர் சுகாதார அமைச்சகம் முதல் உலக சுகாதார மையம் வரை வலியுறுத்தி வருகிறது

இந்த நிலையில் மாஸ்க் அணியாமல் வெளியே வரும்போது 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் கும்பகோணத்தில் மண்டை ஓட்டுடன் வேஷம் போட்டு இருக்கும் அதிகாரி ஒருவர் மாஸ்க் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கும்பகோணத்தில் சாலையில் நடந்து அல்லது வாகனங்களில் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு திடீரென அவர்கள் முன் மண்டை ஓட்டுடன் உள்ள அதிகாரி ஒருவர் தோன்றுகிறார்

அவர்களிடம் மாஸ்க் அணியாமல் இருந்தால் ஏற்படும் ஆபத்து குறித்தும் விழிப்புணர்வை விளக்குகிறார். அதன் பின்னர் அவர்களிடம் 200 ரூபாய் அபராதம் பெற்றுக்கொண்டு அவர்களை அனுப்பி வைக்கிறார் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply