கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி முதல் நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டன
இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் திரையரங்குகள் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு தியேட்டர் அதிபர்கள் இன்னும் இரண்டு நாட்களில் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் முதல்வர் இன்று சென்னை வந்தவுடன் தியேட்டர் அதிபர்கள் இறப்பு குறித்த முடிவை எடுப்பார் என்றும் கூறியுள்ளார்
எனவே இந்த வாரத்தில் அனேகமாக தியேட்டர்கள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது