ஈபிள் டவருக்கு தீவிரவாதிகள் மிரட்டல்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக புகழ் பெற்ற ஈபிள் டவர் உள்ளது. இந்த டவர் 324 மீட்டர் உயரம் கொண்டது. கடந்த 1889ம் ஆண்டு கட்டப்பட்டது. டவர் மீது ஏறி பாரிஸ் நகரின் அழகை கண்டு ரசிக்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த டவரை தகர்க்க போவதாக மர்ம நபர்கள் அடிக்கடி போனில் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதேபோல் நேற்று பிற்பகல் 3 மணிக்கு போலீசுக்கு மர்ம நபர் போன் செய்து, ஈபிள் டவரை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளான்.

பரபரப்பு அடைந்த போலீசார், டவர் பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற்றினர். டவருக்கு சீல் வைக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் டவர் முழுவதும் அலசி ஆராய்ந்தனர். ஆனால், சந்தேகப்படும்படியான எந்த பொருளும் இல்லை. எனினும், அந்த வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply