பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசு குழுவின் நடுவர் இதை அறிவித்தார். மூன்று அமெரிக்க பொருளாதார பேராசிரியர்கள் இதனை பகிர்ந்துகொள்கின்றனர். லார்ஸ் பீட்டர் ஹன்சன், யூஜின் பமா, ராபர்ட் சில்லர் ஆகிய மூவரும், பொருளாதாரத்தில் சொத்துக்களின் மதிப்பை குறிக்கும் மதிப்பீடுகளை வரையறை செய்ததற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
யூஜின் பமா மற்றும் லார்ஸ் ஹன்சன் ஆகியோர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியர்களாக பணியாற்றுகின்றனர். ராபர்ட் சில்லர் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர்கள் பொருளாதாரத்தில் வர்த்தக சொத்துகளுக்கான மதிப்பீட்டு நிலவரங்களை பட்டியலிட்டுள்ளனர்.
கடந்தாண்டு பொருளாதார நோபல் பரிசு அமெரிக்கர்களான ஆல்வின் ரோத் மற்றும் லாயிட் சாப்லி ஆகியோருக்கு வழப்பட்டது.