நாளை புரேவி புயல்: வானிலை மையம் அறிவிப்பு

புரேவி புயல் நாளை உருவாகிறது என வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என அறிவித்துள்ள வானிலை மையம், இதனால் தென் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையைக் கடந்து குமரிக்கடல் பகுதியில் புயல் நிலை கொள்ளும் என்றும், 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ள வானிலை மைய இயக்குநர் புவியரசன், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply