தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன

எட்டு மாதங்களுக்குப் பின்னர் கல்லூரிகள் திறக்கப்படுவது அடுத்து மாணவர்கள் உற்சாகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று முதல் ஆராய்ச்சி மற்றும் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்க படுவதாகவும் அவர்களுடைய உயர் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வேலை வாய்ப்பை கருத்தை கொண்டே இன்று முதல் பாடங்கள் நடத்த அரசு அனுமதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்று கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் முக கவசம் அணிந்து தனிநபர்கள் இடைவெளியை பாதுகாத்து நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது

Leave a Reply