சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை என சிறைத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு விடுமுறை சலுகை கிடைக்காது என்றும், சிறைத் துறை கூறியுள்ளது
சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருந்தபோது 35 நாட்கள் சசிகலா சிறையில் இருந்தார் என்றும், சசிகலா சிறையில் இருந்த 35 நாட்கள் தண்டனை காலத்தில் கழிக்கப்பட்டது என்றும் சிறைத் துறை விளக்கமளித்துள்ளது
மேலும் 2 முறை பரோலில் 17 நாட்கள் சென்றது சேர்க்கப்பட்டது என்றும், எனவே 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதிதான் சசிகலா விடுதலை ஆவார் என்றும் சிறைத் துறை விளக்கமளித்துள்ளது