விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
வேளாண் சட்டம் குறித்து சிலர் விஷமத்தனமாக பரப்புரை செய்கிறார்கள் என்று கூறிய முதல்வர் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டங்கள் என்றாலும் அதை தமிழக அரசு ஏற்காது என்றார்
மேலும் வேளாண் சட்டங்களை தரகர்கள்தான் எதிர்க்கிறார்கள் என்றும், புதிய வேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்றும், அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என கூறியமுதல்வர் பழனிசாமி அரசு பொதுமக்களைத் தேடிச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது என்றும் தெரிவித்தார்