கமல்ஹாசன் தலைமையில் உருவாகியிருக்கும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி தினகரனின் அமமுக கூட்டணியுடன் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
அதிமுக திமுக என்ற இரண்டு பெரிய திராவிட கட்சிகளின் கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்னவென்றால் கமல் மற்றும் தினகரன் தனித்தனியாக கூட்டணி அமைத்தால் சாத்தியமில்லை என்றும் இருவரும் இணைந்து மற்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்
ஏற்கனவே கமல் கூட்டணியில் ஒரு சில கட்சிகளும் தினகரன் கூட்டணியில் ஒரு சில கட்சிகளும் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த இரண்டு கூட்டணிகளும் ஒரே கூட்டணியாக இணைந்து போட்டியிட்டால் அதிமுக திமுக கூட்டணிக்கு பெரும் சவால் கொடுக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்