நல்லவர்களே வருக: டுவிட் மூலம் கமல்ஹாசன் அழைப்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் நேற்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் என்பது தெரிந்ததே

ஆலந்தூரில் தொடங்கிய தேர்தல் பிரசாரம் நேற்று மயிலாப்பூரில் முடிந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பேசி வருகிறார். மேலும் இன்று மாலை மடிப்பாக்கத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச இருக்கிறார்

இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் நல்லவர்களே வருக என்ற அழைப்பு விடுத்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது

நேற்று எம்.ஜி.ஆர் தந்த ஆலந்தூர் மீன் மார்க்கெட்டில் துவங்கியது என் பிரச்சாரம். மயிலை மாங்கொல்லை வரை தொடர்ந்தது மக்கள் வெள்ளம். இன்று மாலை மடிப்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். நல்லவர்களே வருக.

Leave a Reply