இதுவரை பி.ஈ என்ற பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு கணிதம் மற்றும் இயற்பியல் வேதியல் பாடம் கட்டாயமாக இருந்தது ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைப்படி பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களும் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
அனைத்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சற்றுமுன் அறிவித்துள்ள அறிவிப்பு ஒன்றில் இயற்பியல், கணக்கு, கணினி அறிவியல், வேதியியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், வணிகவியல், வேளாண்மை என எந்த பாடத்தில் தேர்ச்சி பெற்று இருந்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் அனைவரும் சேரலாம்
ஏதேனும் மூன்று துறைகளில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே ஒரு நிபந்தனை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
கணிதம் இருந்தால் மட்டுமே பி.ஈ சேர முடியும் என்ற இருந்த நிலை மாறியுள்ளது மாணவர்களுக்கு பயனளிக்குமா?