அதிமுக கரை வேட்டியை தீ வைத்துவிட்டு திமுக வேட்டியை உடுத்திய தொண்டர்!

ஆலங்குடி தொகுதியில் புதிதாக கட்சியில் இணைந்த ஒருவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட சீட் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர் ஒருவர் அதிமுக கரை வேட்டியை திடீரென கழட்டி அதை முன்னாள் அமைச்சர் நினைவிடம் முன்பு தீ வைத்து கொளுத்தினார்

அதன்பின்பு அவர் திமுக கரை வேட்டியை கட்டிக் கொண்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிமுகவில் சமீபத்தில் சேர்ந்த ஒருவருக்கு ஆலங்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply