மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து நாளை முதல் ஒரு வாரத்திற்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மேலும் அம்மாநிலத்தில் உள்ள ஓட்டல்கள் உணவகங்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
எனினும் பார்சல் மட்டும் அனுமதி உண்டு என்று கூறப்பட்டுள்ளது மேலும் திருமணம் மற்றும் இறுதி சடங்கு தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது