இந்தியாவில் ஒரே நாளில் 1,15,736 பேருக்கு கொரோனா: மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,01,785 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 166,208 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 11,789,759 என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் 133,002,022பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,885,153 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 107,248,066 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 22,868,803 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

Leave a Reply