தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
சற்று முன்னர் தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் நலன் கருதியும் தமிழ்நாடு அரசு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஏப்ரல் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை சில தளர்வுகளுட்ன் ஊரடங்கை நீடித்துள்ளது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் முற்றிலுமாக தடை விதித்தும் ஒருசில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும் அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது
இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது