பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது
தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல மொழிகளில் ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்