மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் எடுத்த செல்பி தற்போது வைரலாகி வருகிறது
துருவ் விக்ரமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த செல்பியில் இந்த அழகான மனிதரை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார் இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது என்பதும் இந்த புகைப்படம் இணையதளங்களில் இரு தரப்பின் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
துருவ் விக்ரம் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் விக்ரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் மாரிசெல்வராஜ் இயக்கும் அடுத்த படத்திலும் விக்ரம் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது