கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது
அந்த வகையில் கேரள அரசு கேரளாவில் 7 மணியுடன் திரையரங்குகளை மூட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது
இதனை அடுத்து மாலை காட்சி மற்றும் இரவு காட்சி ரத்து செய்யப்படுவதாகவும் காலை காட்சி மற்றும் மதிய காட்சி மட்டுமே திரையரங்குகளில் திரையிட அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் கேரளாவில் உள்ள முக்கிய திரையரங்குகள் மொத்தமாகவே மூடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்