மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்ட தேர்தல் முடிவடைந்து இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநில தேர்தல் ஆணையம் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது
இதன்படி மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி என்று மேற்குவங்க மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது
இந்தநிலையில் பேரணி ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டம் ஆகிய அனைத்தையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் ரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது