இயக்குனர், ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தார்!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் சற்றுமுன்னர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54

சூர்யா நடித்த காப்பான் என்ற திரைப்படத்தை கடந்த 2019ஆம் ஆண்டு இயக்கியவர் கே வி ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பே சூர்யா நடித்த அயன், தனுஷ் நடித்த அனேகன் உள்பட ஒருசில படங்களை இயக்கி உள்ளார் என்பதும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி உள்பட ஒருசில படங்களை அவர் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

கேவி ஆனந்த் அவர்களுக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் உயிரிழந்ததாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன கேவி ஆனந்த் அவர்களின் மறைவு திரையுலகினர் பெயர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply