முழு ஊரடங்கு காலத்தில் அழகு நிலையங்கள், முடி திருத்தும் கடைகள் செயல்படத் தடை!
முழு ஊரடங்கில் அனைத்து தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், ஐ.டி.நிறுவனங்கள்,பூங்காங்கள், அருங்காட்சியகங்கள் செயல்படத் தடை.
முழு ஊரடங்கு காலத்தில் அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது! ஆனால் அதே நேரத்தில் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் மட்டும் தங்களுடைய டிக்கெட்டை காண்பித்து பயணம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்றும் மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது