இந்தியாவில் கொரோனா 3வது அலை: விஞ்ஞானிகள் தகவல்

இந்தியாவில் தற்போது கொரோனா முதல் அலை முடிந்து இரண்டாவது அலை மிகப்பெரிய அளவில் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை மிக விரைவில் தொடங்கும் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தற்போது மிக வேகமாக பரவி வரும் இரண்டாவது அலை வரும் ஜூலை மாதம் முடிவுக்கு வரும் என்றும் அதன் பின்னர் அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் மூன்றாவது அலை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்

ஆனால் அதே நேரத்தில் மூன்றாவது அலை பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது என்றும் அக்டோபர் மாதம் பரவிவரும் நிலையில் தான் அது குறித்து ஆய்வு செய்ய முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply