ரிசர்வ் வங்கி கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்!

ரிசர்வ் வங்கி கவர்னருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் மக்கள் இஎம்ஐ செலுத்த முடியாமல் இருப்பதை எடுத்து இஎம்ஐ செலுத்த கால நீட்டிப்பு வழங்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் கடன் சுமையை குறைக்கும் வகையில் ஆறுமாதங்களுக்கு இஎம்ஐ செலுத்த அவகாசம் அளிக்க வேண்டுமென்றும் அதுவரை வட்டி வசூலிக்க கூடாது என்றும் பிரதமர் மோடி, ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

இந்த கடிதத்திற்கு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் இடமிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்