இனி அமெரிக்காவில் இருந்தும் கூகுள் பே மூலம் பணம் அனுப்பலாம்!

முன்னணி பணம் பரிவர்த்தக நிறுவனமான கூகுள் பே மூலம் இனி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதுவரை இந்தியாவில் மட்டுமே பண பரிவர்த்தனைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருந்தும் இந்தியாவில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்பலாம்
வெஸ்டர்ன் யூனியன் மற்றும் வைஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் மூலம் கூகுள் பே மூலம் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருந்து பணம் அனுப்பலாம்

இதில் பணம் பெறுபவர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை, பணம் அனுப்புபவர்களுக்கு மட்டுமே கட்டணம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நடைமுறை இந்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து கூகுள் பே மூலம் இந்தியாவுக்கு பணம் அனுப்பலாம் என்ற தகவல் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது