சிபிஎஸ்இ ,சி.ஐ.எஸ்.சி.இ. , 12-ம் வகுப்பு ஆகிய அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ஏப்ரல் 14ஆம் தேதி சிபிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் பத்தாம் வகுப்புக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதேபோல் ,சி.ஐ.எஸ்.சி.இ. வெளியிட்ட அறிக்கையிலும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் இந்த தேர்வுகளை மொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது