கொரோனா பரவுதல் குறைந்தாலும் உயிரிழப்பு அதிகரிப்பதால் பதட்டம்!

இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

முதல் அலையின்போது உயிரிழப்புகள் மிகவும் குறைவாக இருந்தது என்றும் ஆனால் அதை விட பலமடங்கு இரண்டாம் அலையில் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இந்தியாவில் பாதிப்பு ஒரே வாரத்தில் 13 சதவீதம் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது ஆனால் அதே நேரத்தில் தொற்று குறைந்தாலும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது