மதுரையில் 50 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது
கொரோனா நோய் தொற்றின் பக்க விளைவுகளில் ஒன்று தான் இந்த கருப்பு பூஞ்சை என மருத்துவர்கள் விளக்கம்
“ஏற்கனவே கொரோனா பாதித்தவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்ததால் பக்க விளைவு” என மருத்துவர்கள் தகவல்
கருப்பு பூஞ்சை அறிகுறி வந்த பின்பு தாமதித்தால் உயிர் இழக்கும் அபாயம் உண்டு என்றும், ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா, கேரளாவில் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டது என்றும், பிற மாநிலங்களில் இருந்த கருப்பு பூஞ்சை தொற்று தமிழகத்திலும் கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.